Breaking News

பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஊராட்சி மன்ற தலைவர்

50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்திற்கு முழு கரும்புடன் தட்டில் புத்தாடை, பொங்கலுக்கு தேவையான பொருட்களை வைத்து சம்மந்தி சீர் வைத்து மரியாதை வழங்கினர்


காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு ஊராட்சியில் உள்ள வளர்புரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு விப்பேடு பழங்குடியினர் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பழங்குடியின மக்களுடன் புது பானையில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அதன்பின் பொங்கல் பொங்கியதும் பழங்குடியினர் மக்களுடன் சேர்ந்து  பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் கூவி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். 

பின்னர் அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்களுக்கு புது தட்டில் புத்தாடை, செங்கரும்பு, பொங்கல் கொண்டாட தேவையான பொருட்கள் உள்ளிட்டவை வைத்து வெத்தலை பாக்கு பழத்துடன் சம்மந்தி சேர் வழங்கினர். அதன் பின் பொங்கலிட்ட பெங்களை படையலிட்டு அனைவரும் ஒன்று கூடி வழிபட்டனர். 



இப்பகுதி மக்களுடன் அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாட இதுவே முதல் முறையாகும் இதனால் எங்கள் சமூகத்தினர் மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் ஆனந்துடன் உள்ளனர்

No comments

Thank you for your comments