காலி பிளாஸ்டிக் கவரை வைத்து செல்போன் திருட்டு
சூப்பர் மார்கெட்டில் மர்ம நபர்கள் கையில் காலி பிளாஸ்டிக் கவரை வைத்து சட்டை பாக்கெட்டில் இருக்கும் செல்போன் திருட்டு தொடர்கதை ஆகி வருகிறது
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் இயங்கும் பிரபல தனியார் சூப்பர் மார்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்கெட் மாநகராட்சியில் 5 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
இந்நிலையில் இந்த சூப்பர் மார்கெட்டில் கடந்த வருடம் காலி பிளாஸ்டிக் கவரை வைத்துகொண்டு பொதுமக்களிடம் சட்டை பாக்கெட்டில் உள்ள விலையுயர்ந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டது, சூப்பர் மார்கெட்டில் உள்ள பொருட்களை பெண்கள் லாவகமாக உடையில் மறைத்து திருடுவது என சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி விரலாகி வந்தன.
இந்நிலையில் பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளரின் கார் டிரைவர் ஆன ரமேஷ் வீட்டிற்க்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி பில் கவுண்டரில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் தனியாக வந்து கையில் வைத்திருந்த காலி பிளாஸ்டிக் அவரின் மீது வைத்து வாடிக்கையாளரை திசை திருப்பி லாவகமாக பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.2,500 பணம் திருடி சென்ற சிசிடிவி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது. இது குறித்து போலீசார் சிசிடிவி காட்சி வைத்து தேடி வருகின்றனர்.

No comments
Thank you for your comments