Breaking News

காஞ்சிபுரத்தில் 11 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் நகர் ஒலிமுகம்மதுபேட்டையில் கர்நாடகாவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 11.440 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை போலிஸார் பறிமுதல் செய்திருப்பதுடன் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.



காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் ஒலிமுகம்மதுபேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரிசி அறவை ஆலையில் தலா 26 கிலோ எடையுள்ள 440 மூட்டைகள் மொத்த எடை 11,440 கிலோ இருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்து.

இத்தகவலின் பேரில் ஆய்வாளர் முகேஷ்ராவ் தலைமையிலான போலீஸôர் அரிசி அறவை ஆலைக்கு சென்று அங்கிருந்த 440 மூட்டை ரேஷன் அரிசியையும், கடத்துவதற்குப் பயன்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி(32) உதயகுமார்(37) ராஜதுரை(24) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை மொத்தமாக சேமித்து வைத்து கர்நாடக மாநிலத்துக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்திருந்ததும் போலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.

 

No comments

Thank you for your comments