காஞ்சி மாநகரின் புத்தகக் கண்காட்சியை மெருகூட்டியவைகள்... நீண்ட பட்டியல்...
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமார் 15000 பார்வையாளர்கள் கலந்துக்கொண்டு, சுமார் ஓரு கோடி மதிப்பிலான புத்தகங்களை 80,000 வாசகர்கள் பெற்றதாக நிறைவு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்திய முதலாவது புத்தக திருவிழா நிறைவு நாள் விழா இன்று (02.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, 53 துறை சார்ந்த வல்லுநர்களின் அயராத உழைப்பினால், 104 புத்தக அரங்குகள், கோளரங்கம், மற்றும் பள்ளி கல்லூரிகளின் கலை நிகழ்ச்சிகள், பல வகை போட்டிகள் ஆகியவை காஞ்சி மாநகரின் புத்தகக் கண்காட்சியை மெருகூட்டச் செய்தன.
2022 டிசம்பர் 23 தொடங்கி 2023 ஜனவரி 2 வரை காஞ்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்ததோடு மட்டுமல்லாமல், மாலை வேலைகளில் பேசிய சிறப்பு பேச்சாளர்களின் சீரிய உரை நம் செவிக்கு விருந்தளித்தது என்றால் அது மிகையல்ல.
சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சொன்ன ஒருமித்த கருத்து என்னவெனில் இதற்கு முன்வெவ்வேறு மாவட்டங்களில் அவர்கள் உரை நிகழ்த்திய புத்தகத் திருவிழாவில் வந்திருந்த கூட்டத்தை விட எண்ணில் அடங்கா கூட்டம் காஞ்சி மாநகரில் கூடியிருந்ததை பார்த்த பொழுது காஞ்சியின் மக்கள் புத்தகத்தின் மீது கொண்ட நேசத்தையும் அவர்களது இலக்கிய தாகத்தையும் உணர முடிந்ததாக கூறியது நம் மாநகரத்தின் பெருமைக்கு ஒரு சான்றுதானே.
காஞ்சி புத்தக திருவிழாவின் சிறப்பு பேச்சாளர்களின் மிகச்சிறந்த உரைக்கு சான்றாக அவர்கள் கூறியதில் ஓரிரு கருத்துக்களை உங்கள் முன் கூற விழைகிறேன்.
மதிப்புமிகு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் “தமிழை நேசிப்போம்” என்ற தலைப்பில் பேசிய போது உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் விட்டுச் செல்வது அறிவு மட்டுமே. அதற்கு உதவுவது புத்தகங்கள் என்று உரையாற்றினார்.
மதிப்புமிகு சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் காஞ்சியின் பெருமை அறிஞர் அண்ணா என்ற தலைப்பில் பேசும்பொழுது சக மனிதனை மதிக்கும் அரசியல் நாகரிகத்தை முதன்முதலில் கற்றுத்தந்தவர் அறிஞர் அண்ணா என்று பெருமிதத்தோடு கூறினார்.
விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் அ னா ஆ வன்னா என்ற தலைப்பில் பேசும்பொழுது பிரபஞ்சத்திற்கு காதுகள் உண்டு நம் என்ன அலைகள்
மிகச் சரியானதாக இருந்தால் அவற்றை மிகச் சரியாக பிரபஞ்சம் வெளிப்படுத்தும். நம் எண்ணங்கள் மேம்பட புத்தக வாசிப்பு மிக முக்கியம் என்றார்.
திருமதி கவிதா ஜவகர் அவர்கள் பேசும்பொழுது, நாம் ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் கவனமாக இருக்க வேண்டும் புத்தக வாசிப்பு அதற்கு மிக முக்கியம் என்று கூறினார்.
தாமல் கோ. சரவணன் அவர்கள் பேசும் பொழுது புத்தக வாசிப்பு மொழியின் அழகையும் இலக்கிய சுவையையும் நம்முள் உருவாக்கும் என்று கூறினார்.
விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் ஈரோடு மகேஷ் அவர்கள் பேசும்பொழுது மனித சக்தியை மனிதனுக்கு உபயோகமாக மாற்றக்கூடிய வகையில் நாம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மதிப்பிற்குரிய திரு கு. ஞானசம்பந்தம் அவர்கள் பேசும்பொழுது சங்ககால இலக்கியங்களை உலக அளவில் பரப்பிய பெருமை சமகாலத்தவரையே சாரும் என்ற கருத்தை முன் நிறுத்தினார்.
சன் டிவி புகழ் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் பேசும்பொழுது குடும்பத்தினர் அனைவரும் பொது நேரம் ஒதுக்கி ஏதாவது புத்தகம் தினமும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருமதி சுகித்ராணி அவர்கள் பேசும் பொழுது குறலவற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி உரையாற்றினார்.
நகைச்சுவை பேச்சாளர் திரு மோகன் சுந்தரம் அவர்கள் பேசும்பொழுது எந்த செயலை செய்ய தொடங்கும் பொழுதும் ஒரு நிமிடம் சிந்தனை செய்ய வேண்டும் அதற்கு புத்தக வாசிப்பு மிகுந்த பயனளிக்கும் என்று கூறினார்.
நம் காஞ்சி மாநகரின் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சிபி எழிலரசன் ஐயா அவர்கள் பேசும்பொழுது நம்மிடம் இருக்கும் புதையலை தெரிந்துகொள்ள புத்தக வாசிப்பு உதவும் என்றும் நாம் யார் என்று உணர்த்துவது மட்டுமல்லாமல் நம்மிடம் உள்ள அறிவுப் புதையல் அன்பு புதையல் போன்ற அனைத்து புயல்களையும் தோண்டி எடுக்க உதவுவது புத்தகங்கள் மட்டுமே என்றும் புத்தகங்கள் மீதுள்ள அவரது நேசத்தை வெளிப்படுத்தினார்.
டாக்டர் கு சிவராமன் அவர்கள் பேசும்பொழுது நம்முடைய உணவுப் பழக்கமும் என்னிடம் இருக்க வேண்டும் என்று மிக நேர்த்தியாய் கூறினார்.
நர்த்தகி நடராஜ் அவர்கள் தன்னையே நாம் நாம் நம்மையே நேசிக்க வேண்டும் என்றும் நம்முடைய பக்தியை நமக்கும் நம் உழைப்பிற்கும் தர வேண்டும் என்று கூறிய அவரை அதற்கு முன் உதாரணமாகவும் திகழ்வதாக வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறந்த நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இன்று நிறைவு விழாவில் அய்யா திண்டுக்கல். லியோனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம் நிகழ்ச்சி உங்கள் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.
இப்புத்தக திருவிழாவில் 30,000 மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் பங்கேற்றனர், 12,000 மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
1,50,000 பார்வையாளர்கள் இப்புத்தக திருவிழாவினை பார்வையிட்டு, 80,000 புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும், இத்திருவிழாவினை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றியக்குழுத்தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இத்திருவிழாவினை சிறப்பாக நடத்திட நன்கொடைவழங்கிய 43 நன்கொடையாளர்களுக்கு புத்தக திருவிழா நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர், திருமதி.சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், மாவணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments