Breaking News

காஞ்சிபுரம் புத்தக திருவிழா நிறைவு விழா -சுமார் 1கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்திய முதலாவது புத்தக திருவிழா நிறைவு நாள் விழா இன்று   நடைபெற்றது.


53 துறை சார்ந்த வல்லுநர்களின் அயராத உழைப்பினால், 104 புத்தக அரங்குகள், கோளரங்கம், மற்றும்  பள்ளி கல்லூரிகளின்  கலை நிகழ்ச்சிகள், பல வகை போட்டிகள் ஆகியவை  காஞ்சி மாநகரின் புத்தகக் கண்காட்சியை மெருகூட்டச் செய்தன.

டிசம்பர் 23 தொடங்கி  ஜனவரி 2 வரை காஞ்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்கள்  கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்ததோடு மட்டுமல்லாமல், மாலை வேலைகளில் பேசிய சிறப்பு பேச்சாளர்களின் சீரிய உரை  செவிக்கு விருந்தளித்தது என்றால் அது மிகையாகது.

சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சொன்ன ஒருமித்த கருத்து என்னவெனில் இதற்கு முன்வெவ்வேறு மாவட்டங்களில் அவர்கள்  உரை நிகழ்த்திய புத்தகத் திருவிழாவில்  வந்திருந்த கூட்டத்தை விட எண்ணில் அடங்கா கூட்டம் காஞ்சி மாநகரில் கூடியிருந்ததை பார்த்த பொழுது காஞ்சியின் மக்கள் புத்தகத்தின் மீது கொண்ட நேசத்தையும் அவர்களது இலக்கிய தாகத்தையும் உணர முடிந்ததாக கூறினர்.

இப்புத்தக திருவிழாவில் 30,000 மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் பங்கேற்றனர், 12,000 மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

1,50,000 பார்வையாளர்கள் இப்புத்தக திருவிழாவினை பார்வையிட்டு, 80,000 புத்தகங்கள் சுமார்  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

மேலும், இத்திருவிழாவினை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றியக்குழுத்தலைவர்களுக்கு  நினைவு பரிசு வழங்கப்பட்டது. இத்திருவிழாவினை சிறப்பாக நடத்திட நன்கொடைவழங்கிய 43 நன்கொடையாளர்களுக்கு புத்தக திருவிழா நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி அவர்களின் சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

No comments

Thank you for your comments