Breaking News

இருளர் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டுவரும்  குடியிருப்புகளை  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  மற்றும்  ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர் இன்று (03.01.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் மற்றும்  சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகள், காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டு குளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகள், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், திருப்பெரும்புதூர், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகள் மொத்தம் 443 குடியிருப்புகள் 19 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்  தெரிவித்தாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்காக, 443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று, 2020-2021-ஆம் ஆண்டில்  நிதி அறிக்கை, அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். அந்த வகையில், இந்த வீடு கட்டும் திட்டம், ஆரம்பிக்கப்பட்டு  நடைப்பெற்று வருகின்றன் 50 சதவீதம் பணிகள் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்குள்  முடிவடையும் நிலையிலும் மற்ற பகுதிகளிலும் விரைவாக கட்டி முடிக்கப்படும். 2021-22- ஆம் ஆண்டில்  அறிக்கையில் 50 கோடி மதிப்பில், ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிட நலத்துறையின் சார்பாக, இயங்கிவரும் பள்ளிக்கு நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை  கட்டிடங்களுக்காகவும், கழிப்பறைக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிகபடியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை செய்து முடிக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது முடிக்கப்படாத பணிகள் அடுத்தடுத்த வருடங்கள் செயல்படுத்தப்பட்டு வரும். இந்த ஒதுக்கீடு கட்டிடங்களுக்காகவும், கழிப்பறைக்காகவும் செயல்படுத்தப்பட்டு வரும்.

இதேமாதிரி, எல்லா பள்ளிகளையும், விடுதிகளையும் சரி செய்யப்படும். மேலும் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருக்கின்றன அதனையும் உயரம் ஏற்றி கட்டப்படும் எனவும்,   எல்லாவற்றிக்கும் முக்கியத்துவம்  கொடுத்து, தரப்படும்  நிதியை பொறுத்து, இதனை  கட்டி முடிக்கப்படுகின்றன. 

அதைத்தவிர, பள்ளியில் பள்ளி கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மூலமாக  வருகிற நிதியில் ஆதி திராவிட நலத்துறையின் சார்பாக, இயங்கிவரும் பள்ளிக்கு அதிகபடியான நிதியினை கேட்டுப்பட்டுள்ளன. அதிகபடியான பெறப்படும் நிதியில் ஏப்ரல் மாதத்திற்கு மேல், இந்த பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும்.

ஆதிதிராவிட பள்ளிகளுக்கு  192 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனம் செய்வதற்கும் நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், வாலாஜாபாத். ஒன்றிய குழுத் துணைதலைவர் திரு.சேகர் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments