Breaking News

சிஐடியு கைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கைத்தறி நெசவுத் தொழில் குறித்த  சிஐடியு கைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவினை அளித்தனர். 



காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தொழிற்சங்க மைய குழு நிர்வாகிகள்  சிஐடியு மாநில பொது செயலாளர் முத்துக்குமார் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களை சந்தித்து கைத்தறி நெசவு தொழில் குறித்த கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.

காஞ்சிபுரம் மாநகரமானது பாரம்பரிய பட்டு கைத்தறி நெசவுத்தொழில் மற்றும் அசல் பட்டு சேலை உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாகும். 

இதனால் சுமார் 40,000 தொழிலாளர்கள் இத்தொழில் மூலம் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 90 கோடி அளவிற்கும் தனியார் வர்த்தகம் சுமார் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் வர்த்தக பாதிப்பும் கூட்டுறவு சங்கங்கள் லாபம் பெருமளவில் குறைந்து பல சங்கங்கள் நட்டத்தை நோக்கி போகின்றன எனவும் ஏழைகள் பணிபுரியும் குடிசைத் தொழில் என்கிற முறையில் பட்டு சேலைகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது எனவும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகம் முழுவதும் கைத்தறி தொழில் பெறும் நெருக்கடியை சந்தித்து வருகிறது எனவும் இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் கோரிக்கை மனுவாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்திடம் கொடுத்தனர்.

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேலும் அந்த மனுவில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்ற இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதில் நெசவாளர் குடும்பங்கள் புதிய தலைமுறை வேலை வாய்ப்பு கிடைக்க உதவிகரமாக இருக்கும் எனவும் அனைத்து நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ குடும்ப காப்பீடு ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும் மனுவில் 3 கோரிக்கைகளாக இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது சிஐடியு கைத்தறி தொழிற்சங்க தலைவர்கள் வாசுதேவன், லட்சுமிபதி, வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி சங்கத் தலைவர் நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments