Breaking News

07-01-2023 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 07.01.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற் பொறியாளர் திரு. K.ஸ்ரீதர், ஏ.எம்.ஐ.இ.ஏ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

 ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 07.01.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனாம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டுர் பகுதி, திருக்காலிமேடு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள் பகுதிகள் செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை  ஆகிய பகுதிகளில் வரும் 07.01.2023 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை  தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற் பொறியாளர் திரு. K.ஸ்ரீதர், ஏ.எம்.ஐ.இ.ஏ., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments