முத்துவும் முப்பது திருடர்களும்.... சைபர் குற்றங்கள்....
முத்துவும் முப்பது திருடர்களும் என்ற சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு கையேடுயை சென்னை பெருநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் இணைய வெளியானது மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளையும், அதற்கு இணையான சவால்களையும் அளித்துக் கொண்டே இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இணையவழி குற்றங்களும் பெருகி வருகின்றன. பொதுமக்களின் பணத்தை குறிவைத்து பெரும்பான்மையான சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன.
வரன்முறை இன்றி மக்களின் மீது தொடுக்கப்படும் சைபர் குற்றங்களை எதிர்த்து போராட விழிப்புணர்வு என்னும் ஆயுதம் தேவைப்படுகிறது.
முத்துவும் முப்பது திருடர்களும் என்ற இப்புத்தகம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
மக்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் கையாளும் முப்பது வழிமுறைகள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்தும் இப்புத்தகத்தில் விளக்கப்படங்களுடன் எளிய முறையில் புரிந்துக்கொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களின் சைபர் குற்றங்கள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.
கீழே உள்ள link- யை பயன்படுத்தி முத்துவும் முப்பது திருடர்களும் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here => 🖱 முத்துவும் முப்பது திருடர்களும்

No comments
Thank you for your comments