சிறுவர் சிறுமிகள் போகி நெருப்பின் அருகே மோளம் அடித்துகொண்டாட்டம்
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் அதிகாலை 3 மணியிலிருந்து வீட்டில் வாசலில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடிய வருகின்றனர்.
சிறுவர் சிறுமிகள் போகி நெருப்பின் அருகே மோளம் அடித்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதமாக இன்று போகிப் பண்டிகை மக்கள் கொண்டாடி வருகின்றனர்
பழையன கழிதலும் புதியன புகுதலும் என போகிப் பண்டிகை நாளானது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து மற்றும் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கி எறிய வேண்டும் என்பதையே வலியுறுத்திய போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று அதிகாலை முதல் வீடுகளில் முன்பு பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளான சின்னையங்குளம், மிலிட்டரி ரோடு போன்ற பகுதிகளில் இதில் சிறுவர், சிறுமியர்கள் மோளன்கள் அடித்தும் போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சார்பில் போகி பண்டிகையை பொது மக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படியும் கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே, காஞ்சி மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பாரம்பரிய போகையை கொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.

No comments
Thank you for your comments