ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விசூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் நடைபெற்று வரும் பள்ளி செல்லா பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்கான பாரதியார் உண்டு உறைவிடப் பள்ளியில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது.
குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதுநிலை திட்ட மேலாளர் தூயவன் தலைமை தாங்கினார் பள்ளி பொறுப்பாளர் திலகவதி, முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் வழங்கினார்.
விசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார் திட்ட மேலாளர்கள் ஜெகத்ரட்சகன் ராகவன் சுரேஷ்குமார் ஒன்றிய மேலாளர் ஏழுமலை, பொன்னுவேல் ஆசிரியர்கள் வள்ளி, நிஷா ஆகியோர் பொங்கல் தின வாழ்த்துரை வழங்கினர்.
குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது




No comments
Thank you for your comments