Breaking News

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய்யை சேர்க்க பாஜக நூதன ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவளான்கேட் பகுதியில் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் பிரபாகரன் ஏற்பாட்டில், மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில், மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் தென்னை விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் தென்னை விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுரைத்தலின்படி காஞ்சிபுரத்தில் தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை உடன் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்குவது வழக்கம்.

இதேபோல் இந்த ஆண்டு அரிசி, சர்க்கரை, 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததின் பேரில் கருப்பு விவசாயிகள் தங்கள் பயிரிட்ட பொங்கல் பண்டிகைக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய கரும்பினை பொங்கல் பரிசு தொகையில் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக முழுக்க கரும்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து அரசு தொகுப்பில் கரும்பு சேர்த்து அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய்யை சேர்க்க கோரி பாஜக வலியுறுத்தி மாவட்டந்தோறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்திவருகின்றன.

மேலும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒரு குடும்ப அட்டைக்கு மாதந்தோறும் 10 தேங்காய் மற்றும் 2 லிட்டர் தேங்காய் எண்ணெய் விலை இல்லாமல் வழங்க கோரியும் காஞ்சிபுரம் பாஜக சார்பில் தென்னங்கன்று, இளநீர், தேங்காய் ஆகியவைகளை மலை போல் குவித்து நூதன முறையில் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் வாசன், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் அனந்தபாபு,மாவட்ட இளைஞரணி தலைவர் ஜானகிராமன் காஞ்சி மாநகரம் மேற்கு நகர தலைவர் ஜீவானந்தம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி... 

செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்

No comments

Thank you for your comments