காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக பகலவன் இன்று பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக பகலவன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல்துறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டும் , கூடுதலாக இடம் மாற்றங்களும் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் சரக்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு என காவல்துறை துணைத் தலைவர் அலுவலகம் காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது.
காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி...
செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்
கடந்த காலங்களில் காவல்துறை தலைவராக சத்திய பிரியா ஐபிஎஸ் இந்த நிலையில் அவருக்கு தற்போது காவல் துறை தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்பியாக பணிபுரிந்து வந்த பகலவன் ஐபிஎஸ் அவர்கள் காவல்துறை துணைத் தலைவராக காஞ்சிபுரம் சரகத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 12 மணியளவில் காஞ்சிபுரம் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் முறைப்படி சரக டிஐஜியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக அலுவலகம் வந்த அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் , செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
காவல்துறை சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கபட்டது. பதவியேற்குப்பின் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த காவல் அதிகாரிகள் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
காஞ்சி சரக டிஐஜியாக பதவியேற்ற பகலவன் ஐபிஎஸ் தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கோட்டார் பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் எம் ஏ பொருளாதாரம் பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு டிஎஸ்பியாக தனது முதல் பணியை காவல்துறையில் தொடங்கினார். அதன்பின் செங்கல்பட்டு கடலூர் வேலூர் விழுப்புரம் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த பின் சென்னை மாநகரில் டி நகர், அடையார் , பூக்கடை மற்றும் வடக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக பதவி வகித்தார்.
இதனை அடுத்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ் பி ஆக பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் கலவரம் ஏற்பட்டதற்குப் பின் திறமையான முறையில் கையாண்டு சிறப்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் இவர்களை கட்டுப்படுத்தி அமைதியான சரகம் என்ற பெயரை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

No comments
Thank you for your comments