Breaking News

தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் மாவட்ட நீதிபதி மாண்புமிகு எம்.இளங்கோவன்

 காஞ்சிபுரம் மாவட்ட  நீதிபதி மாண்புமிகு எம்.இளங்கோவன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.    


வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பார் அசோசியேஷன் தலைவர் பி எஸ் ரமேஷ் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எம் இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றினார் 

உடன் முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் கயல்விழி முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி ஆர் ராஜேஸ்வரி குற்றவியல் நடுவர் நீதிபதி ஜே வாசுதேவன் மற்றும் நீதிபதிகள் திருஞானசம்பந்தம். சரண்யா செல்வம். ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

இதில் லாயர் அசோசியேஷன் தலைவர்ஜான், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் துணைத் தலைவர் ஜி சுப்பிரமணி நன்றிகளை தெரிவித்தார். 

இதேபோல் இதே வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு எம் ஜி ஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்க சார்பில் சங்கத் தலைவர் வீரத்திலகம் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இதில் செயலாளர் கே சங்கர் முன்னில வைகித்தார் உடன் இயக்குனர்கள் எம். மணிமேகலை, இராதாமணி, சுகாசினி, இளங்கோவன், மோகனரங்கன், தமிழ்அழகன், வீரபத்திரன், மோகன், மற்றும் கணக்காளர் செல்வி, சிறப்பு நிலை உதவியாளர்கள் விஜயலட்சுமி, முகமது உஸ்மான். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

No comments

Thank you for your comments