குடியரசு தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்த 117 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் இன்று (26.01.2023) நடைபெற்ற 74-வது குடியாசு தின விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களும், சிறப்பாக பணிபுரிந்த 117 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.
74-வது குடியரசு தினா விழாவில் அரசு துறை சார்பில், 112 பயனாளிகளுக்கு ரூ.2,03,51,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் முன்னாள் படைவீரர் அலுவலகம் மூலம் 4 நபர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியம், மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,25,000/-மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக,
3 நபர்களுக்கு ரூ.1,75,000/- மதிப்பில் பட்டுச்சோலை வியபாரம், மளிகைக்கடை, காகிதக்கூழ் பொம்மை உற்பத்தி மேற்கொள்ள உதவித்தொகையும், தாட்கோ மூலம் 4 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக
ரூ. 28,000/- மதிப்பிலும், வேளாண்மை பொறியில் துறை சார்பில் 6 நபர்களுக்கு ரூ.5,10,000/- மதிப்பிலான பவர் டில்லரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்
20 நபர்களுக்கு ரூ.1,50,00,000/- மதிப்பிலான குடியிருப்பு ஆணையையும், வருவாய் துறை சார்பில் 71 நபர்களுக்கு ரூ.35,53,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் ஆதரவற்ற விதவை உதவித்தொகையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 4 நபர்களுக்கு ரூ.9,60,000/- மதிப்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஓதுக்கீடு ஆணையையும் என 112 பயனாளிகளுக்கு ரூ.2,03,51,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்து துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 335 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 4 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கி சிறப்பிக்கபட்டது.
இந்நிகழ்ச்சியின் போது காவல் துறை சரக துணைத் தலைவர் திரு.பகலவன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.கோ.சிவருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,காஞ்சிபுரம் மாவட்டம்.








No comments
Thank you for your comments