Breaking News

காவலர் திருமண மாளிகையில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்...

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தாேர் அவர்கள் தலைமையில் காவலர் திருமண மாளிகையில் பொங்கல் திருவிழா நடைபெற்றது 


இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டன வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது 

பின்னர் ஆவடி ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில் ஆவடி காவல் ஆணையரகத்தின் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு 4 மாடிகள் கொண்ட 480 வீடுகளும் காவலர்களுக்காக புதியதாக 550 போலீஸ் கோட்ரஸ் மற்றும் ஆயுதப்படைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 ஏக்கர்ஸ் நிலப்பரப்பையும் காவலர்களுக்காக திருமண மாளிகையும் கட்டி நமக்காக தமிழக அரசு வழங்கி இருக்கிறது. 

தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது பிறகு பட்டாபிராம் போக்குவரத்து துறையினர் சார்பாக உதவியாளர் ஜெயலட்சுமி உத்தரவின் பெயரில் ஆய்வாளர் கோதண்டன் உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன் குணசேகரன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உற்சாகத்துடன் இன்று 13/01/2023 அன்று பொங்கல் பண்டிகையை காவல்துறையினர் அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தல கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்

No comments

Thank you for your comments