அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கி பொருட்களை சேதபடுத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கி மற்றும் மருத்துவமனையில் உள்ள உபகரங்களை சேதப்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அரசு மருத்துவமனையில் பொருட்களை சேதப்படுத்தியதற்கு ரூபாய் ஏழு லட்சத்து 35 ஆயிரம் அபராதமும் விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கலியன். இவருக்கு கடந்த 15.7.2018 அன்று திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது மகன் வேல்முருகன் மற்றும் மகள் சுஜாதா ஆகியோர் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி...
செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்யம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை செய்தனர். ஆனால் இதனை ஏற்காத வேல்முருகனும் அவரது சகோதரி சுஜாதாவும், மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர் மற்றும் மருத்துவமனையில் இருந்த உடல் பரிசோதனை இயந்திரங்களை சேதப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் சுஜாதா மற்றும் வேல்முருகன் மீது விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றவாளிகளுக்கு நீதிபதி பிரபாசந்திரன் தண்டனை அறிவித்தார்.
அதன்படி முதலாம் குற்றவாளி வேல்முருகனுக்கு இரண்டு பிரிவுகளில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வீதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரு பிரிவுகளில் 5000 வீதம் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் 10 நாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் குற்றவாளி வேல்முருகனுக்கு அரசு மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியதற்காக ரூபாய் 7,35,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
வேல்முருகனின் சகோதரி சுஜாதாவுக்கு ரூபாய் 1000 அபராதமும், அதை கட்ட தவறினால் 10 நாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்களை தாக்கினால் தண்டனை வழங்கும் சட்ட பிரிவுகளில் தமிழகத்தில் முதல்முறையாக அதிகபட்ச தண்டனையாக இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் சுப்ரமணியன் வாதாடினார் .

No comments
Thank you for your comments