மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) வேலை... கடைசி தேதி 20-01-2023
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம் (குன்றத்தூர்-3, உத்திரமேரூர்-3) ஆகிய வட்டாரங்களில் 6 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:
1. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.
2. வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.
4. இருப்பிடம்: சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 20.01.2023
விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி
இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) அலுவலகத்தில் காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 20.01.2023-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments