தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.... பதிவு செய்ய கடைசி தேதி 17-01-2023
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் அனைத்து பிரிவினருக்கும் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. மாற்றுத்திறனாளி ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.
மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3000/- பரிசுதொகையாக வழங்கப்படுகிறது. மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவும் அதில் முதல் மூன்று இடங்களை பெறுவோர்க்கு ரூ.100000/- முதல் ரூ.600000/- வரையிலான பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளி போட்டியாளர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in என்ற முகவரியில் போட்டியாளர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களை வரும் 17.01.2023–க்குள் பதிவு செய்திடவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments