கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த சிறப்பு முகாம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II ல் 2021-22 மற்றும் 2022-23 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள கீழ்கண்ட 72 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த சிறப்பு முகாம் 19.01.2023 மற்றும் 09.02.2023 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
1. காஞ்சிபுரம் வட்டாரத்தில் ஆரியபெரும்பாக்கம், முசரவாக்கம், திருப்புக்குழி, கோளிவாக்கம், சிறுனைபெருகல், ஒலுக்கோல்பட்டு, கீழ்பெரமநல்லூர், முட்டவாக்கம், பெரும்பாக்கம், முத்துவேடு, கம்பராஜபுரம்
2. வாலாஜாபாத் வட்டாரத்தில் வையாவூர், பூசிவாக்கம், தென்னேரி, புலியம்பாக்கம், ஏகனாம்பேட்டை, புத்தகரம், உள்ளாவூர், அகரம், கூத்திரம்பாக்கம், திருவங்கரனை, ஒழையூர், நாயக்கன்பேட்டை, மருதம், தொடூர், மேல்பொடவூர்
3. உத்திரமேரூர் வட்டாரத்தில் ரெட்டமங்கலம், ஆனம்பாக்கம், மேனலூர், தோட்டநாவல், காவாம்பயிர், சின்னாலம்பாடி, கட்டியம்பந்தல், திருப்புலிவனம், இளநகர், காவானூர்புதுச்சேரி, வயலக்காவூர், பென்னலூர், பினையூர், புள்ளம்பாக்கம், பாலேஷ்வரம், ஒரக்காட்டுப்பேட்டை, சிலம்பாக்கம், மேல்பாக்கம், புலிப்பாக்கம், பழவேரி
4. திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் மேவலூர்குப்பம், போந்தூர், வல்லம், வளர்புரம், வல்லக்கோட்டை, கீவலூர், ஓ.எம். மங்கலம், மேட்டுப்பாளையம், சிறுமாங்காடு, கீரநல்லூர், பாப்பான்குழி, கண்ணன்தாங்கல். அக்கமாபுரம்
5. குன்றத்தூர் வட்டாரத்தில் பரனைபுதூர், நந்தம்பாக்கம், மாடம்பாக்கம், கோழுமணிவாக்கம், எருமையூர், வளையக்கரனை, அமரம்பேடு, மலைப்பட்டு, சேத்துப்பட்டு, சிக்கராயபுரம், மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, எரையூர்
இச்சிறப்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்க உள்ளதால் அந்தந்த கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து துறை திட்டங்களின் பயன்களை பெருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments