திருட்டு வழக்கில் ஈடுபட்ட கௌதம் கைது... 6 சவரன் தங்க நகைகள் பறிமுதல்...
திருமுல்லைவாயில் காவல் நிலையம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கௌதம் (30) என்பவர் கைது ஆறு சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கவியரசு (27) இவர் அத்திப்பட்டில் சீட்டு கவர் போடும் கடை வைத்துள்ளார் கடந்த 25:12:2022 ஆம் தேதி அவரது மனைவி ஜெனிபர் அந்தோணி மேரி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று 29-12-22 தேதி வீடு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ஆறு சவரன் தங்க நகை காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தார்.
வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சந்தேகத்தின் பேரில் அதே வீட்டில் முதல் தளத்தில் வசித்து வரும் நபர் கௌதம் (30) த/பெ பாபு என்பவரை 02-01-2023 தேதி கைது செய்து அவரிடமிருந்து ஆறு சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments
Thank you for your comments