செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க காத்திருக்கும் கூட்டம்... 400-க்கும் மேற்பட்ட பயணிகள் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை
செங்கல்பட்டு :
சென்னையில் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு விளங்கி வருவதால், ஏராளமான பொதுமக்கள் செங்கல்பட்டு ரயில் பயணத்தை நம்பியுள்ளனர். செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள், விரைவாகவும் குறைந்த விலையில் பயணிக்க தொடர் வண்டியை நம்பியுள்ளனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயிலில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் வேலை பார்க்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முடித்து ரயிலில் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இந்த நிலையில் டிக்கெட் எடுக்க நூற்றுக்கணக்கான பயணிகள் குவிந்துள்ளதால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
டிக்கெட் எடுப்பதற்கு இரண்டு கவுண்டர்கள் மட்டுமே செயல்படுவதால், நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் பயணிகள். முன்பதிவு இல்லாமல் செல்ல மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்க இரண்டு கவுண்டருக்கு மட்டும் செயல்படுவதால் 400 க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருக்கும் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரம் இரண்டும் பல நாட்களாக செயல்படாமல் இருப்பதால், அதிகளவு கூட்டம் கூடியுள்ளது.
தானியங்கி இயந்திரம் செயல் பட்டிருந்தால் கூட்டம் சில நிமிடங்களில் டிக்கெட் பெற்று இருக்கலாம் என தெரிவிக்கின்றனர் பயணிகள். உடனடியாக தானியங்கி எந்திரத்தை சரி செய்ய வேண்டும் மற்றும் கூடுதல் கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

.jpg)

No comments
Thank you for your comments