Breaking News

எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்

கோவை :

அ.தி.மு.க., நிறுவனரான மறைந்த, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, கோவையில் தடபுடலாக கொண்டாடப்பட்டது.


கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 106வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள அவரது சிலைக்கும், அண்ணாதுரை, ஜெயலலிதா சிலைகளுக்கும் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம், முன்னாள் மேயர் வேலுசாமி. முன்னாள் துணை மேயர் லீலாவதி உள்ளிட்டோர், மலர் மாலை அணிவித்தனர்.பின், இதய தெய்வம் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பேரீச்சம் பழம் வழங்கினர். பின், உறுதிமொழி ஏற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

எம்.ஜி.ஆர்., நடித்த படங்களில் இருந்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் புரட்சித்தம்பி தலைமையில்,அ.தி.மு.க., 50வது வார்டு கிளை சார்பில், உடையாம்பாளையம் பகுதியில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 

காமராஜர் காலனி, அன்னமார் கோவில் வீதியில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, லட்டு வழங்கப்பட்டது. அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. 

ரத்தினபுரியில் பகுதி கழக செயலாளர் வெண்தாமரை பாலு, 46வது வார்டு வெள்ளிங்கிரி தலைமையில், கவுன்சிலர் பிரபாகரன் முன்னிலையில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 

பின், ரத்தினபுரியை சேர்ந்த, 2,000 பேருக்கு சிக்கன் பிரியாணி, அவித்த முட்டை, சிக்கன் சாப்ஸ்சுடன் விருந்து வழங்கப்பட்டது.

38வது வார்டு எம்ஜிஆர் நகரில் இன்ஜினியர் சந்திரசேகர், எம்.எல்.ஏ அம்மன் கே. அர்ஜுனன்  தலைமையிலும் எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், இனிப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் வள்ளியம்மை அறக்கட்டளை நிறுவனர் அன்பு (எ)செந்தில் பிரபு கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், அந்தந்த வார்டுகளில், கட்சி கொடிக்கம்பத்துக்கு கீழ், எம்.ஜி.ஆர்., படம் வைக்கப்பட்டு, வார்டு நிர்வாகிகள் தலைமையில், பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments