Breaking News

மனுநீதி நாள் முகாமில் 305 பயனாளிகளுக்கு ரூ.4,39,85,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 காஞ்சிபுரம் மாவட்டம்,  குன்றத்தூர் வட்டம், வட்டம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 305 பயனாளிகளுக்கு ரூ.4,39,85,000/- (ரூபாய். நான்கு கோடியே முப்பத்தொன்பது  இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் மட்டும்)  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் வழங்கினார்கள்.



காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வட்டம்பாக்கம் கிராமத்தில் இன்று (24.01.2023) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 305  பயனாளிகளுக்கு  ரூ.4,39,85,000/- (ரூபாய். நான்கு கோடியே முப்பத்தொன்பது  இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கி  தெரிவித்ததாவது:

காஞ்சிபுரம் மாவட்டம்  குன்றத்தூர் ஒன்றியம், வட்டம்பாக்கம் கிராமத்தில்,  வருவாய்த்துறையின் சார்பில், ரூ.3.73 (மூணு கோடியே எழுபத்தி மூணு லட்சம்) மதிப்பில், இலவச வீட்டுமனைப் பட்டா 196 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித் தொகை 33 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ரூ.1.32 இலட்சம்  மதிப்பில், பாரத சுகாதார இயக்கம் கழிப்பறை வசதி 11 பயனாளிகளுக்கும், ரூ.16.80 இலட்சம் மதிப்பில், பிரதம மந்திரி, குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் 7 பயனாளிகளுக்கும், ரூ. 18.60 மதிப்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்கு வங்கிக் கடனும், மாவட்ட தொழில் துறை சார்பில், ரூ. 4.70 இலட்சம் மதிப்பில், தொழில் வங்கிக் கடன் உதவி 5 பயனாளிகளுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், ரூ.24,000/- மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் 5 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத் துறையின் சார்பில், ரூ.3.64 இலட்சம் மதிப்பில்,  பயிர்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மத்திய காலக்கடன் 6 பயனாளிகளுக்கும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பயனாளிகள் தாமாக  வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பில், 10 பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளும், மொத்தம் 305 பயனாளிகளுக்கு, ரூ.4,39,85,000/- (ரூபாய். நான்கு கோடியே முப்பத்தொன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் மட்டும்) மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெறுகின்ற மனுக்களை, ஆய்வு செய்து முக்கிய பிரச்சனை விரைவில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகள். முக்கியத்துவம் தந்து மக்களுக்கும் உதவிடும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

இம்முகாம் அனைத்து மாவட்டங்களிலும், அதன் ஒன்றியங்களில் மாதத்திற்கு ஒரு முறை, மனுநீதி முகாம்கள் நடத்தி, இந்நிகழ்ச்சியில் பெறுகின்ற மனுக்களை, ஆய்வு செய்து முக்கிய பிரச்சனை விரைவில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகள். முக்கியத்துவம் தந்து மக்களுடைய பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்திட வேண்டும். 

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், ஏழை, எளிய மற்றும்  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய, வாழ்வு உயர வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இம்முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி. சரஸ்வதி மனோகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments