Breaking News

ஜன.26 அன்று சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற முடிவு... பெரமனூர், காமராஜர் காலனி பொது மக்கள்

சேலம், ஜன.25-

சேலம் மாநகரம் பெரமனூர், காமராஜர் காலனி (ஆசிரியர் குடியிருப்பு) 16 டிவிசன் பொது மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த கழிவுநீர் கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதனால் சாக்கடை கழிவு தண்ணீர் வெளியே செல்லாமல் வருட கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்கள். 


இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் சார்பாகவும், அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பாகவும் தமிழக முதல்வர், சேலம் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர், சேலம் மாவட்ட ஆட்சியர், அஸ்தம்பட்டி மாநகராட்சி உதவி ஆணையாளர், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம்  பலமுறை மனு கொடுத்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், நடவடிக்கை எடுக்காத சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வருகிற 26 குடியரசு தினத்தன்று பெரமனூர், காமராஜர் காலனி பொது மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறார்கள். 

மக்கள் நலம் காக்க தமிழக முதல்வர் அவர்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களும், சேலம் மாநகராட்சி ஆணையர், சேலம் மாநகராட்சி மேயர்,  சேலம் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் நலன் காக்க வேண்டுமாய் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Thank you for your comments