நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்ற சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆடை ஆபரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வாங்கிட நிதியுதவிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்ட உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, துறைவாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்று முதல் மனுக்கள் பெறப்படுகின்றது.
இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்ககூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் நிதி ஆதாரத்துடன் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்படும். வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் காலை காஞ்சிபுரம் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.
இன்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கைகளாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வரப்பட்டு சரிசெய்ய வேண்டும், மின்கம்பங்களை மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரிசெய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.
நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரைத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆடை ஆபரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வாங்கிட நிதியுதவி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் மன்றத் தலைவர் திரு.வாகைசந்திரசேகர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், இயல், இசை,நாடகம் மன்றம் உறுப்பினர்-செயலாளர் திருமதி.விஜயா தாயன்பன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments