Breaking News

28.01.2023 அன்று தனியார் துறை வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்  மாவட்டம்,   திருப்பெரும்புதூர்  வட்டாரத்தில் தமிழ்நாடு  மாநில  ஊரக  நகர்புற  வாழ்வாதார இயக்கம்,  மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி  வழிகாட்டு மையம், மாவட்ட  நிர்வாகத்தின் சார்பாக,  தீன் தயாள்  உபத்யாய  கிராமின்  கௌசல்யா யோஜனா (DDU-GKY)  திட்டத்தின் கீழ், தனியார்  துறை வட்டார  அளவிலான  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறுகிறது. 

இதுகுறித்து காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி தெரிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ், தனியார் துறை வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் (Job Fair) 28.01.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருப்பெரும்புதூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. 

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன் பெற தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் DDU-GKY மற்றும் ESTP திட்டத்தின் கீழ், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி  மக்கள்  தொடர்பு  அலுவலர், காஞ்சிபுரம்  மாவட்டம்.

No comments

Thank you for your comments