குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம்... ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 63 சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்தத் தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை, அவ்வாவணத்திற்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக, 1899-ஆம் ஆண்டிற்கான இந்திய முத்திரை சட்ட பிரிவுகள் 47(A)(1), 47(A)(3) கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள இனங்கள் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாயை ஈட்ட ஏதுவாக, முடங்கியுள்ள வசூல் பணியை முடுக்கி விடும் நோக்கத்தில், பதிவுத்துறை தலைவரது சுற்றறிக்கை எண்.46204/எல்3/2022 நாள்:-31.12.2022-ல் இப்பொருள் தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கிணங்க, பதிவு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 01.01.2023 முதல் 31.03.2023 வரையிலான காலத்திற்கு ஒரு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 63 சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்தத் தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை, அவ்வாவணத்திற்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவ்வாறான கிரையதாரர்கள் தத்தம் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரைத் தீர்வையினை (அதாவது அசல் மற்றும் வட்டியுடன்) செலுத்தி அசல் ஆவணத்தை விடுவித்துக் கொள்ள ஏதுவாக சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் தனிவட்டாட்சியர், காஞ்சிபுரம் அவர்களை தொடர்பு கொண்டு, இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரையதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments