Breaking News

2023-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2023-ற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப.,  அவர்கள் வெளியிட்டார்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் இன்று 05.01.2023 வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள். 

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 05.01.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,38,654. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,51,480. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,86,994. இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 180. 


மேலும் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 29. திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1394 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் (05.01.2023-ன்படி) விவரம் பின்வருமாறு. 

தொகுதிகளின் எண்கள் மற்றும் பெயர்கள் 05.01.2023 அன்றைய வாக்காளர்களின் விவரம் 

 ஆலந்தூர்  தொகுதி ஆண்கள் 190858, பெண்கள் 1,95,336. இதர  57 மொத்தம் 3,86,251.

 திருப்பெரும்புதூர் (தனி) தொகுதி ஆண்கள் 1,79,638,  பெண்கள் 1,90,135 .  இதர 60  மொத்தம் 3,69,833.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி... 

செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்

உத்திரமேரூர்  ஆண்கள் 1,29,282, பெண்கள் 1,39,080, இதர 43  மொத்தம் 2,68,405.

காஞ்சிபுரம்  ஆண்கள் 1,51,702. பெண்கள்  1,62,443. இதர  20 3,14,165 வாக்காளர்கள்  

காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் மொத்தம் ஆண்கள்  6,51,480. பெண்கள் 6,86,994.  இதர 180  மொத்தம் 13,38,654 

இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

No comments

Thank you for your comments