பழங்குடியினருக்கு தரமற்ற வீடு கட்டிய விவகாரத்தில் இருவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்... ஆட்சியர் அதிரடி உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஊத்துக்காட்டு பகுதியில் இருளர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை, மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் கட்டப்பட்ட வீடுககள் தரமற்று கட்டப்பட்டதாக வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதவன் இருவரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு அருகே பழங்குடியின இருளர் இன மக்களுக்கு சுமார் 3 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் 72 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது இந்த இடத்தை தமிழக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
அப்பொழுது கட்டடத்துடைய தன்மை தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது செங்கலில் இருந்து மாவு போல் கொட்டியது கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். தரம் இல்லாத கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரரை எச்சரித்து அவரை கடிந்தார் மாவட்ட ஆட்சியர்.
அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
இதனை முறையாக மேற்பார்வை செய்யாத அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் விளக்கம் கேட்டு நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், முறையாக விளக்கம் அளிக்காத வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதவன் ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) முத்து சுந்தரம் உள்ளிட்ட இருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதுபோன்று அதிகாரிகள் அவர்களுடைய பணியை சரியாக செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.... வாழ்த்துக்கள்...

No comments
Thank you for your comments