Breaking News

பாலியல் கூட்டு வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம்



காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் விசாலாட்சி நகரில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க பெண், அப்பெண்ணின் காதலரான ஹரிஷ் என்பவரும் 12.01.2023 அன்று இரவு 19.30 மணியளவில் விப்பேடு BAV பள்ளி எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் அவர்களை கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். 

பின்னர் அந்த 5 நபர்கள் மேற்படி ஹரிஷை கத்திமுனையில் வைத்திருந்து அப்பெண்ணை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று மேற்படி 5 நபர்களும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் கூட்டு வன்புணர்ச்சி செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து பணம் ரூ.200/- மற்றும் 2 செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.03/2023 u/s 363, 376(D), 506(ii) IPC - ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.N.கண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய திரு.ஜீலியஸ் சீசர், காவல் துணை கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் உட்கோட்டம் அவர்களின் தலைமையில் காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.பேசில் பிரேம் ஆனந்த் உதவி ஆய்வாளர்கள் திரு.சிவக்குமார், திரு.முரளி, திரு.துளசி, திரு.சுரேஷ், திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்களை உள்ளடக்கிய மூன்று தனிப்படை குழுக்கள் அமைத்து எதிரிகளைத் தேடி வந்த நிலையில் 

1)விமல்குமார்(25) த/பெ.ரமேஷ்குமார், விநாயகர் கோயில் தெரு, விப்பேடு கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா, 

2)ஊமை (61) மணிகண்டன்(22) த/பெ.வெங்கடேசன், இராணுவவீரா தெரு, செவிலிமேடு, காஞ்சிபுரம். 

3)விக்கி (எ) விக்னேஷ்(22) த/பெ.ரவி, வளர்புரம், விப்பேடு கிராமம்., காஞ்சிபுரம் தாலுக்கா. 

4)மரம் (எ) தென்னரசு (19) த/பெ.குமார், டேங்க் தெரு, விப்பேடு கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா, 

5)ஊக்கு (எ) சிவக்குமார் (20) த/பெ.குணசேகரன், வளர்புரம விப்பேடு கிராமம் காஞ்சிபுரம் தாலுக்கா 

ஆகியோர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரியவந்ததையடுத்து மேற்படி ஐந்து நபர்களையும் விப்பேடு கிராமத்தில் 13.01.2023 அன்று காலை 06.00 மணிக்கு காவல் ஆய்வாளர் திரு.பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் அவர்களின் குழுவினரால் கைது செய்யப்பட்டு எதிரிகளிடமிருந்து களவபோன 2 செல்போன்கள் மற்றும் அவர்கள் வைத்திருந்த ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments