பழங்குடியின இளைஞர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு (SSC) பயிற்சி அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் (CTDP) கீழ் பழங்குடியின (ST) மாணாக்கர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 50 பழங்குடியின (ST) மாணவர்களுக்கு 50 நாட்கள் இலவசமாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (SSC) தேர்வில் பெற்றி பெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (SSC) பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் பழங்குடியின (ST) மாணாக்கர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள +2 தேர்ச்சி மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதியுடைய பழங்குடியின (ST) மாணாக்கர்கள் கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் மற்றும் தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை 10.01.2023க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு
மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் 50 மாணாக்கர்களுக்கு பயிற்சி கையேடுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பயிற்சியின் போது மதிய உணவு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments