Breaking News

30-12-2022 அன்று பர்வின் சுல்தானா கருத்துரை

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில்,  நடைபெறும் புத்தகத் திருவிழாவின் எட்டாம்  30-12-2022 அன்றைய தினம்  வட மாவட்டப் படைப்புகளில் உணவும், உழவும் என்ற தலைப்பில் திரு.கவிப்பித்தன்  அவர்கள் கருத்துரையும், உண்டு தீர்த்தோம் உழுது பார்ப்போம் என்ற தலைப்பில் திருமதி.பர்வின் சுல்தானா அவர்களின் கருத்துரையும், காஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கம் நிகழ்ச்சியும் மற்றும் பள்ளி மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.



காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து, நடத்தும் முதலாவது புத்தக திருவிழா மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் கடந்த (23.12.2022) அன்று தொடங்கி வைத்தார்கள்.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

இம்மாபெரும் புத்தகத் திருவிழா 23.12.2022 முதல் 02.01.2023 வரை நடைபெறுகின்றது.  இப்புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

இதில் தென் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்து கொள்ளும் வகையில் 125 அரங்கங்கள்  அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாளான நாளை (30.12.2022)  காலை 10 மணி  முதல் மாலை 6 மணி வரை பள்ளி மாணவ/மாணவியர்களுக்கிடையேயான போட்டிகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம்,  பாரதி மெட்ரிக் பள்ளி செவிலிமேடு, ஜனாஸ் குலோபல் சி.பி.எஸ்.ஸி பள்ளி காஞ்சிபுரம், மகரிஷி பன்னாட்டு உறைவிடப்பள்ளி சந்தவேலூர், மகாத்மா காந்தி மெட்ரிக் களியனூர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி  பெருநகர். நாராயாண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  ஸ்ரீபாலக் ஷேத்ராலயா வித்வ சபா காஞ்சிபுரம்  மற்றும் சென்னை, இணையவழி குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் வட மாவட்டப் படைப்புகளில் உணவும், உழவும் என்ற தலைப்பில் திரு.கவிப்பித்தன்  அவர்கள் கருத்துரையும், உண்டு தீர்த்தோம் உழுது பார்ப்போம் என்ற தலைப்பில் திருமதி.பர்வின் சுல்தானா அவர்களின் கருத்துரையும், காஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இப்புத்தகத் திருவிழாவில் தினசரி சிறப்பு விருந்தினர்களை கொண்டு பல்வேறு கருத்துரைகள் பள்ளி மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள்  மாணவ/ மாணவியர்கள் ஆர்வத்துடன் அறிவார்ந்த புத்தகங்களை படித்தும் வாங்கியும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments