558 பயனாளிகளுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்,டிச.29
காஞ்சிபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவில் 558 பயனாளிகளுக்கு 45 கோடி மதிப்பிலான கடனுதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.எம்பி க.செல்வம்,எம்எல்ஏ க்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.கவிதா வரவேற்றார்.விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 558 பயனாளிகளுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன்,துணைத்தலைவர் நித்யா.சுகுமார், ஒன்றியக் குழுவின் தலைவர்கள் மலர்க்கொடி குமார்,தேவேந்திரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் ப.திருமேனி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments