தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள்... SDPI கட்சி சார்பில் புகார் மனு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முசரவாக்கம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் நான்குக்கு மேற்பட்ட இடங்களில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன
இந்த சம்பவங்கள் தொடர்பாக SDPI கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் அவர்களின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சையத் பாஷா தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் முசரவாக்கம் கிராமத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கவும், இரவில் ரோந்து காவலர்களை அதிக அளவில் நியமித்து கண்காணிக்க வேண்டுமென SDPI கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பெரிய காஞ்சிபுரம் நகர தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் முசரவாக்கம் கிளைச் செயலாளர் தப்ரோஸ், முசரவாக்கம் கிளை இணைச் செயலாளர் இம்தியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்,

No comments
Thank you for your comments