மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தைய நண்பர்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்
மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தைய நண்பர்கள் சார்பாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் 38 ஜோடி மாடுகள் வந்து பங்கேற்றன, பந்தயத்தை கண்டு களித்து பார்வையாள ர்கள் உற்சாகம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடி கிராமம் உள்ளது,இங்குள்ள மாட்டுவண்டி பந்தைய நண்பர்கள் சார்பாக இன்று காலை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது,
பெரியமாடு மற்றும் சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் பெரிய மாட்டிற்கு 8 மைலும்,சிறிய மாட்டிற்கு 7 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, மதுரை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை முதலான பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 38 ஜோடி மாடுகள் பங்கேற்று பந்தைய தூரத்தை சீறி பாய்ந்து கடந்து வந்ததன.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
அப்போது பெரியமாடு பிரிவு போட்டியின் போது எதிர்பாராத விதமாக பந்தயத்தில் பங்கேற்ற மாட்டுவண்டியின் சக்கரம் ஒன்று உடைந்தது அந்த நிலையிலும் வண்டியை சாரதி லாவகமாக ஓட்டி வந்தார்,அந்த வண்டி பாதியில் நிறுத்தப்பட்டது,பரிசுக்கு வரவில்லை என்றாலும் அந்த நிகழ்வு பார் வையாளர்களை வெகுவாக நெகிழ செய்தது.
இதனைத்தொடர்ந்து, பந்தைய தூரத்தை கடந்து வந்து வெற்றி பெற்ற முதல் நான்கு மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசு தொகை ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரமும் மற்றும் நினைவு கோப்பைகளும் வழக்கப்பட்டது.

No comments
Thank you for your comments