தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்ப்பாளர் (Ombudsman) நியமனம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்ப்பாளர் (Ombudsman) நியமனம் செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக கணேசன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811309 மற்றும் மின்னஞ்சல் முகவரி kanchiombudsman@gmail.com.
🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments