தேசிய ஊரக வேலை தொழிலாளர்களின் வருகையை தேசிய தொலைபேசி கண்காணிப்பு அமைப்பு செயலி (NMMS) மூலம் புகைப்படத்துடன் பதிவேற்றம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகையை தேசிய தொலைபேசி கண்காணிப்பு அமைப்பு செயலி (NMMS) மூலம் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்தல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21.05.2021 முதல் தினசரி இரு முறை NMMS செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, இந்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக இயக்குநர் (ம.கா.தே.ஊ.வே.உ.தி) புதுதில்லி அவர்களின் கடிதத்தில், 01.01.2023 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தனிநபர் சொத்து உருவாக்கம் பணிகளை தவிர்த்து அனைத்து பணித்தளத்திலும் ( 20–க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட பணி கூட) NMMS செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், விலக்கு ஏதும் அளிக்கப்பட மாட்டாது எனவும், இதனடிப்படையிலேயே தான் வருகை பதிவுகள் பதியப்பட்டு நிதி பரிமாற்ற ஆணை (FTO) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முழுமையாக NMMS செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்றுதிறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் NMMS APP வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும் என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள்/பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments