Breaking News

தமிழகத்தில் மருதுதவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 11,333 மருத்துவ கட்டமைப்புகள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களான துணை சுகாதார நிலையங்கள், புற நோயாளி பிரிவு கட்டிடங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டிடம், சித்தா பிரிவு கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டு பொதுமக்கள் பயனுக்காக இன்று (31.12.2022) மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர். 


பின்பு,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர்  பேசியதாவது:

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்கள் பொன்மொழி அந்த நோயற்ற வாழ்வை அனைவருக்கும் வழங்கிட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்கபட்டுள்ளது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 201 வட்டார-நகர –துணை சுகாதார நிலையங்கள், 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ரூ.2.68 கோடி மதிப்பிலான  புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மக்களின் ஆரோக்கித்திற்காகவும், வாழ்விற்காகவும் வருமுன் காப்போம் திட்டம், கண்ணொலி காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, இளம் சிறார் இருதய காப்பீட்டு திட்டம், மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காப்போம்-48 திட்டம், பள்ளி சிறார் நலத்திட்டம், மகப்பேறு திட்டங்கள் ஆகிய எண்ணற்ற மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டு வருகின்றன.

 மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 7 இலட்சத்து 63 ஆயிரத்து 765 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, அதில் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 311 நபர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பிசியோதெரபி, நோய் தடுப்பு சிகிச்சை ஆகியவற்றுக்கான மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 ஆயிரத்து 709 கர்ப்பினி தாய்மார்களுக்கு, ரூ.15 கோடியே 83 இலட்சத்து 18 ஆயிரம்  மதிப்பில் நிதி உதவியும், தாய் சேய் நல பரிசு பெட்டகம், ஜன்னி சுரக்ஷா யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் ஆரம்ப சுகதார நிலையங்களில் குழந்தை பிரசவித்த 23 ஆயிரத்து 53 தாய்மார்களுக்கு பரிசு பெட்டகமும், நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் கல்வி பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு கண்ணொலி காப்போம் திட்டத்தின்கீழ், 2040 மாணவர்களுக்கு ரூ.3 இலட்சத்து 75 ஆயிரத்து 360 மதிப்பிலான கண் கண்ணாடிகளும், பள்ளி சிறார் நலத்திட்டத்தின்கீழ் 843 குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் மாவட்ட முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5 இலட்சத்து 39 ஆயிரத்து 573 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்,  கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொது மக்களுக்கு செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசி திட்டத்தில் 100 சதவீத இலக்க எட்டி  சாதனைப் படைத்தது, மேலும், 9,24,530 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7,86,440 நபர்களுக்கு  இரண்டாம் தவணை தடுப்பூசியும், 1,60,066 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளும் என 18,71,036 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  மேலும் ஏழை எளிய மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது:



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதிலும் இதுபோன்று கட்டப்பட்ட கட்டிடங்கள் வாரத்திற்கு இரண்டு மாவட்டங்கள் என்ற முறையில் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று கட்டிடங்கள் தொடர்ந்து  திறக்கப்பட்டு கொண்டு வருகிறது. எனவே கடந்த ஆண்டு 800 கோடிக்கு மேல் செலவில் ஆரம்ப சுகதார நிலையங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 2011- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திட்டத்தினை  அறிவித்தார்கள்.  அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரி, 1 இயற்கை மருத்துவ கல்லூரிகள்,  34 தனியார் மருத்துவ கல்லூரி என மொத்தம் 71 மருத்துவகல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை   ஆரம்ப சுகாதார நிலையம்,  வட்டார மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை  மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 11,333 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும், இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் 679 மருத்துவமனைகள் மூலம்  விபத்தில் சிக்கிய 1,35,416 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் காரப்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைகள் தரம் உயர்த்தி செயல்படுத்த 218 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா புற்றுநோய்  ஆராய்ச்சி  மையம் கட்டிடபணிகள் நடைபெற்று கொண்டு இருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளப்படி, தமிழ்நாட்டில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள், 21 மாநகராட்சி, 61 நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு  வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம், நாகன்பேட்டை,  பஞ்சுப்பேட்டை, பிள்ளையார்பாளையம், செவிலிமேடு ஆகிய 5 இடங்களில் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. இதற்கான மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர் பணியாளர்களை நிரப்பும் பணி நடைபெறுகின்றன. 

காஞ்சிபுரம் மாவட்டம், கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு, கோவிட் தடுப்பூசி போடும் பணியில் 100 சதவீத இலக்க எட்டி  சாதனைப் படைத்துள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற  உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மருத்துவ மற்றும் பொது சுகாதார இயக்குநர் டாக்டர். செல்வவிநாயகம், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ், திருப்பெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments