Breaking News

அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள், ஒன்றிணைந்த நிகழ்வு

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த  முன்னாள்  மாணவர்கள்,  ஒன்றிணைந்த நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில், 1994 ஆம் ஆண்டு சேர்ந்து, 1997 வரை பயின்ற விலங்கியல் துறை மாணவர்கள், தாங்கள் படித்த  கல்லூரியில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பசுமை நினைவுகளுடன்  சங்கமித்த நிகழ்வு அனைவரையும் நெகழ்ச்சி அடைய செய்தது.

2022- ஆம் ஆண்டு  நிறைவு விழாவை  முன்னிட்டு,  40க்கும் மேற்பட்ட முன்னாள்  மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் ஒன்றிணைந்து, கல்வியை பயிற்சி கொடுத்த  பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து,  நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரியின் பேராசிரியர் வெங்கடேசன், தற்போதைய கல்லூரி முதல்வர் ராஜவேல், முன்னாள் பேராசிரியர் கதிர்வேல் சண்முகம் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்களும் தான் படித்த படிப்பை பற்றியும் பேராசிரியர்கள் பற்றியும், ஒழுக்கங்களை கல்லூரியில் என்னெல்லாம் நிகழ்வுகள் நடந்ததோ? அதையெல்லாம் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், தற்போது  என்ன பணியில் இருக்கிறோம் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

இந்நிகழ்ச்சியை  ஒருங்கிணைந்து செயல்படுத்திய  முன்னாள் வரலாற்று துறை மாணவர் சுந்தரபாண்டியன், தமிழ் துறை மாணவர் ரங்கப்பிள்ளை, இளங்கலை துறை மாணவர் காமராஜ்,  ரவிக்குமார்,  வேல்முருகன், சுலைமான், சித்திரா, விஜி, சுரேஷ், மணிகண்டன் ஆகிய மாணவர்கள் அனைத்து  கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments