Breaking News

கருணையின் கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில் கருணையின் கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக இன்று கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. 



இவ் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கிடியன் எபினேசர்  அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திரு.வி.கா பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லாசர், ஓய்வு பெற்ற முன்னாள் கஸ்பா பள்ளி தலைமை ஆசிரியர்  தேவராஜன் குருவன்குப்பம், அரசு உதவி பெறும் பள்ளியின் உதவி ஆசிரியர் அற்புதராஜ்  கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவை கருணையின் கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் கரோலின்  ஒழுங்கமைப்பு செய்து மாணவர்கள் மத்தியில் ஏழை, எளியவர்களுக்கு நாம் உதவிகரமாக இருக்க வேண்டும் பெறுவதில் கிடைக்கும் இன்பத்தை விட கொடுப்பதில் நாம் இன்பம் காண வேண்டும் என்று மாணவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு செய்தியாக அளித்தார். விருந்தினர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசினை வழங்கினார்கள். கிறிஸ்து பிறப்பு வாழ்த்து மற்றும் 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை முன்னதாகவே கூறி அவர்களை மகிழ்ச்சி படுத்தினார்கள். 

இறுதியில் அற்புதராஜ் ஆசிரியர் கிறிஸ்துமஸ் செய்தியினை டேவிட் லாசர் வழங்கினார். இறுதியில் தேவராஜ் அவர்கள் நன்றி கூறி சிறப்பு ஜெபத்தோடு விழா நிறைவு பெற்றது

No comments

Thank you for your comments