Breaking News

ஊராட்சி ஒன்றியத்திற்கு விருது.... புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்



தமிழக முதல்வர்  ஆணைப்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக  உதயநிதி ஸ்டாலின்  பதவி ஏற்றதை முன்னிட்டும், மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மூலமாக கடந்த 14.12.2022 அன்று பஞ்சாயத்து ராஜ்  அமைப்பில் சிறப்பாக பணியாற்றிய மூன்று ஊராட்சி ஒன்றியத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டதையும் தொடர்ந்து,  புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புழல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. தங்கமணி திருமால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புழல் ஒன்றிய ஆணையாளர் திரு.ஜி.வேதநாயகம், புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திருமதி. மம்மு, இரண்டாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. மல்லிகா மீரான், புழல் ஊராட்சி ஒன்றிய உதவி செயல் பொறியாளர் திருமதி.சிவசங்கரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் திரு.சுந்தர்ராஜன் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

No comments

Thank you for your comments