மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கிராம பகுதிகளில் நடைபெற்று வரும் மகாத்மா காந்திதேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில்நடைபெற்று வரும்மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணிகளைகடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கி. பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
இதில் எருமனூர் ஊராட்சியில்.ஊராட்சி மன்ற தலைவர், தனிநபர் ஒருவர் செய்த நில ஆக்கிரமிப்புகளைகண்டறிந்து அதனை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாட்டு தீவன பயிர்கள், தோட்டப்பயிர்கள், மீன் குளம், போன்ற பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக கொண்டுவந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கால்நடைகளை பராமரிக்க மாட்டுத்தீவனம், மற்றும் உற்பத்தி புல் ஆகியவற்றைபயனாளிகளுக்கு வழங்கினார்.
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பவன் குமார்கிரியப்பனார், வட்டாட்சியர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ராதிகா, ஒன்றிய பெருந்தலைவர் மலர், துணை பெருந்தலைவர் பூங்கோதை, ஊராட்சி மன்ற தலைவர் சௌமியாவீரமணி. துணைத் தலைவர் திருமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சின்னப்பரூர், விசலூர் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் மற்றும் அய்யனார் கோவில் அருகில் உள்ள தோட்டக்கலை பயிர்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் துணைத் தலைவர் அழகாபுரி கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.


No comments
Thank you for your comments