Breaking News

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம், டிச.5 :

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அமைப்பான சமுதாயக்கல்லூரியில் இலவச தொழிற்கல்வியை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

விழாவில் இலவச தொழிற்கல்வியை முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கும் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் கிளை அமைப்பான சங்கரா சமுதாயக் கல்லூரியில் கணினியில் வடிவமைக்கும் பயிற்சி, தையற்பயிற்சி, கணினி பழுது நீக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டது.


கோயில்கள் சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல..  
ரூ.3,700 கோடி கோயில் சொத்துகள் மீட்பு.. முதல்வர் பேச்சு!

இப்பயிற்சியை முடித்த 56 பேருக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.  தையல் ஆசிரியை கவிதா முன்னிலை வகித்தார்.சமுதாயக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் இ.மணிகண்டன் வரவேற்று பேசினார். 

பயிற்சியை முடித்தவர்களுக்கு காஞ்சிபுரம் மேயர் பட்டங்களை வழங்கி பேசுகையில் எந்த தொழில் முனைவோரும் உடனடியாக பெரிய அளவில் வளர்ச்சியடைந்து விட முடியாது. பிரச்சினைகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து விடாமுயற்சிகள் செய்தால் மட்டுமே எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும். மீன் வாங்கித் தருவதை விட மீனைப் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்று ஒரு பழமொழி உள்ளது.கல்லூரி நிர்வாகம் மீனைப் பிடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறது என்று பேசினார்.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு


No comments

Thank you for your comments