காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், டிச.5 :
பெரியகாஞ்சிபுரத்தில் சர்வதீர்த்தக்குளக்கரையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குளக்கரை மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரில் பெரியகாஞ்சிபுரம் பகுதியில் சர்வதீர்த்தக்குளக்கரையில் அமைந்துள்ள குளக்கரை மாரியம்மன் கோயில். இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தலைமை அர்ச்சகர் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் இம்மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
மறுநாள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது. இதனையடுத்து திங்கள்கிழமை காலையில் மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் மகாகும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்கார தீபாராதனைகளையும் ஆலய அர்ச்சகர் வி.எம்.பட்டாபிராமன் செய்தார். இரவு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


No comments
Thank you for your comments