கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் காலமானார்
சாவ் பொல்ஹொ:
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 82) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். நுரையீரல், இதய செயல் இழப்பு சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேவை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பீலே இன்று உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக் கோப்பையை வென்று தந்த பீலே, அனைத்து காலத்திற்குமான சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.
🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு
No comments
Thank you for your comments