Breaking News

கபிலர்மலை அருகே மண் பரிசோதனை முகாம்!

நாமக்கல்,  டிச., 30:

கபிலர்மலை அருகே  நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் வட்டம்  கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் இருக்கூர்  ஊராட்சியில் திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை மையம் மற்றும் கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை  இணைந்து மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை  வழங்கினர்.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

இதில்  பி.ஜி. பி வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் 4 - ம் ஆண்டு வேளாண் மாணவர்கள்  கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு மண் வள அட்டையின் நோக்கம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினர்.

இந்த முகாமில் மண் அறிவியல்  துறை வேளாண் அலுவலர்  சௌந்தரராஜன், கபிலர்மலை வேளாண் அலுவலர் அன்புசெல்வி, உதவி  தோட்டக்கலை  அலுவலர் நவநீத கிருஷ்ணன், உதவி வேளாண்மை  அலுவலர் நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேளாண்மைத் துறையின் நடமாடும் மண் பரிசோதனைக் கூடத்தில் ஆய்வகம் கிராமங்களில் முகாமிட்டு, வயல்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து, அதன் முடிவுகளை விவசாயிகளுக்கு மண்ணில் உள்ள சத்துக்கள் குறைவதே மகசூல் குறைவதற்கு முக்கிய காரணம் என்றும், பெரும்பாலான விவசாயிகள் முறையான மண் பரிசோதனை செய்ய தவறியதே காரணம் என முகாமில் கூறினர். 

முகாமில் பி.ஹெச். உள்ளடக்கம், உப்பு, அமிலம் மற்றும் பிற தாதுக்களுக்கான குறிப்பிட்ட சோதனை நடத்தப்பட்டு மண் வள அட்டை  விவசாயிகளுக்கு வழங்கபட்டது.  இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments