சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் விரைவாக கட்டி முடிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈரோடு காளை மாட்டு சிலை அருகே ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கு மணிமண்டபம் விரைவாக கட்டி முடிக்க வேண்டுமென்று கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் க.சதீஷ்குமார் தலைமை ஏற்றார். அழகேசன், கார்த்தி, மெய்யழகன், பன்னீர்செல்வம், முத்து, தாமரை, வெள்ளியங்கிரி, வீரமணி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
ஈரோடு பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் அதிமுக மனோகரன், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, நாகேந்திரன் மணிகண்டன், ஆனந்தன் இளங்கோவன், கண்ணன், சண்முகம், செல்வராஜ், பழனிச்சாமி, பாண்டியம்மாள், முல்லை அரசு, முருகன், செல்வகுமார், கொங்கு யுவராஜ், ஆதிதர்மன், குருசாமி பிரகாஷ் ஆகியோர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments