Breaking News

11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் டிசம்பர்’22 மாதம் முதல் திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  தகவல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 

விவசாயிகள் தங்களது நெல் அறுவடை மகசூலினை நல்ல விலைக்கு விற்பனை செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக  11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள் முதல் செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வருவாய் கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் டிசம்பர் 26 ம் தேதி முதல்  திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் வருவாய் கிராமம்: காஞ்சிபுரம் வட்டாரம், சிறுகாவேரிப்பாக்கம் குறுவட்டம் (பிர்கா), விஷார்  கிராமத்திலும், வாலாஜாபாத் வட்டாரம், பரந்தூர் குறுவட்டம் (பிர்கா), தொடூர் மற்றும் புரிசை கிராமங்கள், கோவிந்தவாடி குறுவட்டம் (பிர்கா), வேலியூர் மற்றும் கம்மவார்பாளையம் கிராமங்கள், சிட்டியம்பாக்கம் குறுவட்டம் (பிர்கா), சிட்டியம்பாக்கம் மற்றும் மருதம் கிராமங்களிலும்,

திருப்பெரும்புதூர் வட்டாரம், திருப்பெரும்புதூர் குறுவட்டம் (பிர்கா), நாவலூர் கிராமத்திலும்,  சுங்குவார்சத்திரம் குறுவட்டம் (பிர்கா), மதுரமங்கலம் மற்றும் மேல்மதுரமங்கலம் கிராமங்களிலும்,

குன்றத்தூர் வட்டாரம், படப்பை குறுவட்டம் (பிர்கா), அமரம்பேடு கிராமத்திலும், நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.

கே-எம்.எஸ் 2022-23 ம் அண்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 100 சேர்த்து மொத்தம் ரூ.2160/- ம், இதர நெல் ரகங்களுக்கு

ரூ. 75 உயர்த்தி மொத்தம் ரூ. 2115/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  நெல் கொள்முதல் செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் அனைவரும் உரிய ஆவணங்களான அடங்கல் சான்று, ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments