இந்திய மருத்துவக் கழகம்,காஞ்சிபுரம் கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
காஞ்சிபுரம்,டிச.29-
இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நியோ மெட் ரத்த பரிசோதனை மையத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கிளையின் தலைவராக அரசு புற்றுநோய் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் எஸ்.மனோகரன், செயலாளராக கே.எஸ்.தனியக்குமார்,பொருளாளராக வி.ஞானகணேஷ், துணைத் தலைவராக வி.ரவி,துணைச் செயலாளராக வி.முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.தலைவர் எஸ்.மனோகரனுக்கு முன்னாள் தலைவராக இருந்த மருத்துவர் ஏ.என். அரவிந்தன் பதவியேற்பு செய்து வைத்தார்.இதனையடுத்து மகளிர் அணியின் தலைவியாக எம்.நிஷாப்பிரியாவும், மருத்துவக்கல்விக்கான செயலாளராக என்.எஸ்.ராதாகிருஷ்ணனும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்விற்கு இந்திய மருத்துவக் கழகத்தின் மாநிலத் தலைவர் தி.செந்தமிழ்மணி,வடக்கு மண்டல துணைத் தலைவர் பி.டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பதவியேற்புக்கு பின்னர் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சவால்களை சந்திக்க மக்களுக்கு விழிப்ணர்வு மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமத்து மக்களைத் தேடி மருத்துவத்தை கொண்டு சென்று அவர்களைப் பாதுகாப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்திய மருத்துவக் கழகத்தின் நிர்வாகிகள்,மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மருத்துவர் எஸ்.மனோகரனுக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் கிளையின் தலைவராக பதவியேற்பு செய்து வைக்கிறார் முன்னாள் தலைவர் ஏ.என்.அரவிந்தன்
No comments
Thank you for your comments